உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
பீட்டா

இழை இன்னும் முழுமையாக தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்படவில்லை. இன்னும் மொழிபெயர்க்கப்படாதவை ஆங்கிலத்தில் காட்டப்படும்.

சங்கீதங்கள் 1

இந்த அதிகாரம் சேர்ந்த பகுதி: Boek I

Boek I

1துன்மார்க்கர்களுடைய ஆலோசனையின்படி நடக்காமலும், பாவிகளுடைய வழியில் நிற்காமலும், பரியாசக்காரர்கள் உட்காரும் இடத்தில் உட்காராமலும், 2யெகோவாவுடைய வேதத்தில் பிரியமாக இருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாக இருக்கிற மனிதன் பாக்கியவான். 3அவன் நீரோடை ஓரமாக நடப்பட்டு, தன்னுடைய காலத்தில் தன்னுடைய கனியைத் தந்து, இலை உதிராமல் இருக்கிற மரத்தைப்போல இருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். 4துன்மார்க்கர்களோ அப்படியில்லாமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள். 5ஆகையால் துன்மார்க்கர்கள் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை. 6யெகோவா நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கர்களின் வழியோ அழியும்.

வசன எண்கள் தேர்ந்தெடுத்த மொழிபெயர்ப்பைப் பின்பற்றுகின்றன; சில அதிகாரங்களில் ஒரு வசனம் வேறுபடலாம்.

Statenvertaling (1637) · World English Bible (2000) · இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (2019): © 2017, 2019 Bridge Connectivity Solutions, bridgeconn.com, via eBible.org. CC BY-SA 4.0; notes and headings omitted. · மூலங்களும் உரிமங்களும்

வாசிப்பு வசதி

உங்களுக்கு உதவுவதைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் தேர்வு இந்தச் சாதனத்திலேயே சேமிக்கப்படும்.

எழுத்து அளவு

உங்கள் சாதனத்தின் சொந்த அமைப்புகளை (ஜூம், ஸ்கிரீன் ரீடர், டார்க் மோட்) விரும்புகிறீர்களா? அவையும் இங்கே வேலை செய்யும்.