உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
பீட்டா

இழை இன்னும் முழுமையாக தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்படவில்லை. இன்னும் மொழிபெயர்க்கப்படாதவை ஆங்கிலத்தில் காட்டப்படும்.

சங்கீதங்கள் 124

இந்த அதிகாரம் சேர்ந்த பகுதி: Boek V

1மனிதர்கள் நமக்கு விரோதமாக எழும்பினபோது, யெகோவா நமது பக்கத்தில் இல்லாவிட்டால், 2யெகோவா தாமே நமது பக்கத்தில் இல்லாவிட்டால், 3அவர்களுடைய கோபம் நம்மேல் எரியும்போது, நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள். 4அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து, வெள்ளங்கள் நமது ஆத்துமாவின்மேல் பெருகி, 5கொந்தளிக்கும் தண்ணீர்கள் நமது ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும் என்று இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக. 6நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடுக்காமல் இருக்கிற யெகோவாவுக்கு நன்றி. 7வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல நம்முடைய ஆத்துமா தப்பினது, கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம். 8நம்முடைய உதவி வானத்தையும் பூமியையும் உண்டாக்கின யெகோவாவுடைய பெயரில் உள்ளது.

வசன எண்கள் தேர்ந்தெடுத்த மொழிபெயர்ப்பைப் பின்பற்றுகின்றன; சில அதிகாரங்களில் ஒரு வசனம் வேறுபடலாம்.

வாசிப்பு வசதி

உங்களுக்கு உதவுவதைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் தேர்வு இந்தச் சாதனத்திலேயே சேமிக்கப்படும்.

எழுத்து அளவு

உங்கள் சாதனத்தின் சொந்த அமைப்புகளை (ஜூம், ஸ்கிரீன் ரீடர், டார்க் மோட்) விரும்புகிறீர்களா? அவையும் இங்கே வேலை செய்யும்.