உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
பீட்டா

இழை இன்னும் முழுமையாக தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்படவில்லை. இன்னும் மொழிபெயர்க்கப்படாதவை ஆங்கிலத்தில் காட்டப்படும்.

சங்கீதங்கள் 121

இந்த அதிகாரம் சேர்ந்த பகுதி: Boek V

1எனக்கு உதவி வரும் மலைகளுக்கு நேராக என்னுடைய கண்களை உயர்த்துகிறேன். 2வானத்தையும் பூமியையும் உண்டாக்கின யெகோவாவிடத்திலிருந்து எனக்கு உதவி வரும். 3உன்னுடைய காலைத் தள்ளாடவிடமாட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கமாட்டார். 4இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை. 5யெகோவா உன்னைக் காக்கிறவர்; யெகோவா உன்னுடைய வலது பக்கத்திலே உனக்கு நிழலாக இருக்கிறார். 6பகலிலே வெயிலோ, இரவிலே நிலவோ உன்னைச் சேதப்படுத்துவதில்லை. 7யெகோவா உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன்னுடைய ஆத்துமாவைக் காப்பார். 8யெகோவா உன்னுடைய போக்கையும் உன்னுடைய வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றென்றும் காப்பார்.

வசன எண்கள் தேர்ந்தெடுத்த மொழிபெயர்ப்பைப் பின்பற்றுகின்றன; சில அதிகாரங்களில் ஒரு வசனம் வேறுபடலாம்.

வாசிப்பு வசதி

உங்களுக்கு உதவுவதைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் தேர்வு இந்தச் சாதனத்திலேயே சேமிக்கப்படும்.

எழுத்து அளவு

உங்கள் சாதனத்தின் சொந்த அமைப்புகளை (ஜூம், ஸ்கிரீன் ரீடர், டார்க் மோட்) விரும்புகிறீர்களா? அவையும் இங்கே வேலை செய்யும்.