உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
பீட்டா

இழை இன்னும் முழுமையாக தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்படவில்லை. இன்னும் மொழிபெயர்க்கப்படாதவை ஆங்கிலத்தில் காட்டப்படும்.

சங்கீதங்கள் 64

இந்த அதிகாரம் சேர்ந்த பகுதி: Boek II

1தேவனே, என்னுடைய விண்ணப்பத்தில் என்னுடைய சத்தத்தைக் கேட்டருளும்; எதிரியால் வரும் பயத்தை நீக்கி, என்னுடைய உயிரை காத்தருளும். 2துன்மார்க்கர் செய்யும் இரகசிய ஆலோசனைக்கும், அக்கிரமக்காரர்களுடைய கலகத்திற்கும் என்னை விலக்கி மறைத்தருளும். 3அவர்கள் தங்களுடைய நாவை வாளைப்போல் கூர்மையாக்கி, 4மறைவுகளில் உத்தமன்மேல் எய்வதற்காக கசப்பான வார்த்தைகளாகிய தங்களுடைய அம்புகளை நாணேற்றுகிறார்கள்; சற்றும் பயமின்றி திடீரென்று அவன்மேல் எய்கிறார்கள். 5அவர்கள் பொல்லாத காரியத்தில் தங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, மறைவான கண்ணிகளை வைக்க ஆலோசனைசெய்து, அவைகளைக் காண்பவன் யார் என்கிறார்கள். 6அவர்களுடைய நியாயக்கேடுகளை ஆராய்ந்துதேடி, தந்திரமான யோசனை நிறைவேறும்படி முயற்சி செய்கிறார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுடைய உட்கருத்தும் இருதயமும் ஆழமாக இருக்கிறது. 7ஆனாலும் தேவன் அவர்கள்மேல் அம்புகளை எய்வார், திடீரென்று அவர்கள் காயப்படுவார்கள். 8அவர்கள் தள்ளப்பட்டு, கீழே விழும்படி அவர்கள் நாவுகளே அவர்களைக் கெடுக்கும்; அவர்களைக் காண்கிற அனைவரும் ஓடிப்போவார்கள். 9எல்லா மனிதரும் பயந்து, தேவனுடைய செயலை அறிவித்து, அவர் செய்கையை உணர்ந்துகொள்வார்கள். 10நீதிமான் யெகோவாவுக்குள் மகிழ்ந்து, அவரை நம்புவான்; செம்மையான இருதயமுள்ளவர்கள் அனைவரும் மேன்மைபாராட்டுவார்கள்.

வசன எண்கள் தேர்ந்தெடுத்த மொழிபெயர்ப்பைப் பின்பற்றுகின்றன; சில அதிகாரங்களில் ஒரு வசனம் வேறுபடலாம்.

வாசிப்பு வசதி

உங்களுக்கு உதவுவதைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் தேர்வு இந்தச் சாதனத்திலேயே சேமிக்கப்படும்.

எழுத்து அளவு

உங்கள் சாதனத்தின் சொந்த அமைப்புகளை (ஜூம், ஸ்கிரீன் ரீடர், டார்க் மோட்) விரும்புகிறீர்களா? அவையும் இங்கே வேலை செய்யும்.