உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
பீட்டா

இழை இன்னும் முழுமையாக தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்படவில்லை. இன்னும் மொழிபெயர்க்கப்படாதவை ஆங்கிலத்தில் காட்டப்படும்.

சங்கீதங்கள் 82

இந்த அதிகாரம் சேர்ந்த பகுதி: Boek III

1தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தெய்வங்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார். 2எதுவரைக்கும் நீங்கள் அநியாயத் தீர்ப்புச்செய்து, துன்மார்க்கர்களுக்கு முகதாட்சிணியம் செய்வீர்கள். (சேலா) 3ஏழைக்கும் திக்கற்றபிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள். 4பலவீனனையும் எளியவனையும் விடுவித்து, துன்மார்க்கர்களின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள். 5அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள், இருளிலே நடக்கிறார்கள்; தேசத்தின் அஸ்திபாரங்களெல்லாம் அசைகிறது. 6நீங்கள் தெய்வங்கள் என்றும், நீங்களெல்லோரும் உன்னதமான தேவனுடைய மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன். 7ஆனாலும் நீங்கள் மனிதர்களைப்போலச் செத்து, உலகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்து போவீர்கள். 8தேவனே, எழுந்தருளும், பூமிக்கு நியாயத்தீர்ப்புச் செய்யும்; நீரே எல்லா தேசங்களையும் சுதந்தரமாகக் கொண்டிருப்பவர்.

வசன எண்கள் தேர்ந்தெடுத்த மொழிபெயர்ப்பைப் பின்பற்றுகின்றன; சில அதிகாரங்களில் ஒரு வசனம் வேறுபடலாம்.

வாசிப்பு வசதி

உங்களுக்கு உதவுவதைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் தேர்வு இந்தச் சாதனத்திலேயே சேமிக்கப்படும்.

எழுத்து அளவு

உங்கள் சாதனத்தின் சொந்த அமைப்புகளை (ஜூம், ஸ்கிரீன் ரீடர், டார்க் மோட்) விரும்புகிறீர்களா? அவையும் இங்கே வேலை செய்யும்.