உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
பீட்டா

இழை இன்னும் முழுமையாக தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்படவில்லை. இன்னும் மொழிபெயர்க்கப்படாதவை ஆங்கிலத்தில் காட்டப்படும்.

சங்கீதங்கள் 93

இந்த அதிகாரம் சேர்ந்த பகுதி: Boek IV

1யெகோவா ஆளுகை செய்கிறார், மாட்சிமையை அணிந்துகொண்டிருக்கிறார்; யெகோவா வல்லமையை அணிந்து, அவர் அதை வார்க்கச்சையாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்; ஆதலால் உலகம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது. 2உமது சிங்காசனம் ஆரம்பம்முதல் உறுதியானது; நீர் என்றென்றும் இருக்கிறீர். 3யெகோவாவே, நதிகள் எழும்பின; நதிகள் இரைச்சலிட்டு எழும்பின; நதிகள் அலைதிரண்டு எழும்பின. 4திரளான தண்ணீர்களின் இரைச்சலைவிட, கடலின் வலிமையான அலைகளைவிட, யெகோவா உன்னதத்திலே வல்லமையுள்ளவர். 5உமது சாட்சிகள் மிகவும் உண்மையுள்ளவைகள்; யெகோவாவே, பரிசுத்தமானது நிரந்தர நாளாக உமது ஆலயத்தின் அலங்காரமாக இருக்கிறது.

வசன எண்கள் தேர்ந்தெடுத்த மொழிபெயர்ப்பைப் பின்பற்றுகின்றன; சில அதிகாரங்களில் ஒரு வசனம் வேறுபடலாம்.

வாசிப்பு வசதி

உங்களுக்கு உதவுவதைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் தேர்வு இந்தச் சாதனத்திலேயே சேமிக்கப்படும்.

எழுத்து அளவு

உங்கள் சாதனத்தின் சொந்த அமைப்புகளை (ஜூம், ஸ்கிரீன் ரீடர், டார்க் மோட்) விரும்புகிறீர்களா? அவையும் இங்கே வேலை செய்யும்.