உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
பீட்டா

இழை இன்னும் முழுமையாக தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்படவில்லை. இன்னும் மொழிபெயர்க்கப்படாதவை ஆங்கிலத்தில் காட்டப்படும்.

ஓசியா 14

இந்த அதிகாரம் சேர்ந்த பகுதி: Aanklacht en liefde

1இஸ்ரவேலே, உன் தேவனாகிய யெகோவாவிடத்தில் திரும்பு; நீ உன் அக்கிரமத்தினால் விழுந்தாய். 2வார்த்தைகளைக்கொண்டு யெகோவாவிடத்தில் திரும்புங்கள்; அவரை நோக்கி: தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கி, எங்களைத் தயவாக அங்கீகரித்தருளும்; அப்பொழுது நாங்கள் எங்கள் உதடுகளின் பலிகளைச் செலுத்துவோம். 3அசீரியா எங்களைக் காப்பாற்றுவதில்லை; நாங்கள் குதிரைகளின்மேல் ஏறமாட்டோம்; எங்கள் கைகளின் செயலைப்பார்த்து: நீங்கள் எங்களுடைய தேவர்கள் என்று இனிச் சொல்லமாட்டோம்; திக்கற்றவன் உம்மிடத்தில் இரக்கம்பெறுகிறான் என்று சொல்லுங்கள். 4நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன்; அவர்களை மனப்பூர்வமாகச் சிநேகிப்பேன்; என் கோபம் அவர்களை விட்டு நீங்கினது. 5நான் இஸ்ரவேலுக்குப் பனியைப்போல் இருப்பேன்; அவன் லீலி மலரைப்போல் மலருவான்; லீபனோனைப்போல் வேரூன்றி நிற்பான். 6அவனுடைய கிளைகள் ஓங்கிப் படரும், அவனுடைய அலங்காரம் ஒலிவமரத்தினுடைய அலங்காரத்தைப்போலவும், அவனுடைய வாசனை லீபனோனுடைய வாசனையைப்போலவும் இருக்கும். 7அவனுடைய நிழலில் குடியிருக்கிறவர்கள் திரும்புவார்கள்; தானிய விளைச்சலைப்போலச் செழித்து, திராட்சைச்செடிகளைப்போலப் படருவார்கள்; அவனுடைய வாசனை லீபனோனுடைய திராட்சைரசத்தின் வாசனையைப்போல இருக்கும். 8இனி எனக்கும் சிலைகளுக்கும் என்ன என்று எப்பிராயீம் சொல்வான்; நான் அவனுக்குச் செவிகொடுத்து, அவன்மேல் நோக்கமாயிருந்தேன்; நான் பச்சையான தேவதாரு மரத்தைப்போல் இருக்கிறேன்; என்னாலே உன்னுடைய கனி உண்டானது என்று எப்பிராயீம் சொல்வான். 9இவைகளை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? இவைகளை ஏற்றுக்கொள்ளத்தக்க புத்தியுள்ளவன் யார்? யெகோவாவுடைய வழிகள் செம்மையானவைகள், நீதிமான்கள் அவைகளில் நடப்பார்கள்; கலகக்காரர்களோவென்றால் அவைகளில் இடறிவிழுவார்கள்.

வசன எண்கள் தேர்ந்தெடுத்த மொழிபெயர்ப்பைப் பின்பற்றுகின்றன; சில அதிகாரங்களில் ஒரு வசனம் வேறுபடலாம்.

Statenvertaling (1637) · World English Bible (2000) · இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (2019): © 2017, 2019 Bridge Connectivity Solutions, bridgeconn.com, via eBible.org. CC BY-SA 4.0; notes and headings omitted. · மூலங்களும் உரிமங்களும்

வாசிப்பு வசதி

உங்களுக்கு உதவுவதைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் தேர்வு இந்தச் சாதனத்திலேயே சேமிக்கப்படும்.

எழுத்து அளவு

உங்கள் சாதனத்தின் சொந்த அமைப்புகளை (ஜூம், ஸ்கிரீன் ரீடர், டார்க் மோட்) விரும்புகிறீர்களா? அவையும் இங்கே வேலை செய்யும்.